• Jul 25 2025

நடிகர் கருணாஸ் மகள் டயானா திருமணம் -போட்டோ வெளியிட்டு வாழ்த்திய பிரபலம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அஜித் விஜய் தனுஷ் எனப் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் கருணாஸ்.நந்தா, திருடா திருடி, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் தனது காமெடியால் இவர் ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இவர் ஹீரோவாகவும் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, ஆதார் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.


 கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று  எம்.எல்.ஏவாக ஆனார். சமீபத்தில் கருணாஸ், விருமன், கட்டா குஸ்தி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கருணாஸ் மகன் கென் கருணாஸ்  2019-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான  அசுரன் படத்தில்  சிதம்பரம் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். கென் கருணாஸின் நடிப்பு பலரது பாராட்டுதலை பெற்றது குறிப்பிடத்தக்கது.


நடிகர் கருணாஸ், கிரேஸ் தம்பதியருக்கு மகனைத் தவிர, டயானா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கென் கருணாஸ் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சகோதரியின் திருமண புகைப்படத்தை பகிர்ந்து வாழத்தியுள்ளார்‌. அந்த பதிவில், "இனிய திருமண வாழ்த்துகள் அக்கா & மாமா" என கென் கருணாஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும் மணமக்களுடன் கருணாஸ் குடும்பம் இருக்கும் புகைப்படத்தையும் கென் பகிர்ந்துள்ளார்.


Advertisement

Advertisement