• Jul 25 2025

மூன்று மனைவிகளை தவிக்கவிட்டு நடிகையுடன் லிப்லாக் கொடுத்த நடிகர் நரேஷ்- மோசமாக திட்டி தீர்த்த மூன்றாவது மனைவி

stella / 2 years ago

Advertisement

Listen News!


தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் ஒன்றுவிட்ட சகோதரர் நடிகர் நரேஷ். இவர் ஏற்கனவே 3 முறை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்பொழுது 4வதாக பிரபல கன்னட நடிகையான பவித்ரா லோகேஷ் உடன் தொடர்பில் இருந்து வருகின்றார்.புத்தாண்டை ஒட்டி லிப் லாக் செய்யும் வீடியோ வெளியிட்டு விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்தனர். 

ஆனால், மல்லி பெல்லி (மீண்டும் திருமணம் செய்து கொள்) படத்திற்கான விளம்பர வீடியோ என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், நரேஷின் 3ஆவது மனைவி மனைவி ரம்யா ரகுபதி தன்னை இன்னும் விவாகரத்து செய்யாததால், பத்விரா லோகேஷை திருமணம் செய்து கொள்ள விடமாட்டேன் என்று கூறியுள்ளார். 


ஏற்கனவே மூன்று முறை திருமணமாகி ஒவ்வொருவருக்கும் ஒரு குழந்தை இருக்கும் நிலையில், எப்படி இந்த அளவுக்கு அவர் கீழ்த்தரமாக நிற்க முடியும் என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மறைந்த நடிகர் கிருஷ்ணாவுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக நரேஷ் குற்றம் சாட்டியதாகவும், போலி கையெழுத்துடன் எழுதப்பட்ட கடிதம் அவரிடம் இருப்பதாகவும் ரம்யா அதிர்ச்சியளிக்கும் தகவலை தெரிவித்துள்ளார். நரேஷ் மற்றும் ரம்யா ரகுபதிக்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில், முன்னாள் மனைவிகள் ஒவ்வொருவருடனும் சமரசம் செய்ய முடியாத பிரச்சனை காரணமாக அவர்கள் இருவரை பிரிந்து மூன்றாவது மனைவியான ரம்யா ரகுபதியுடன் இருந்து வந்தார்.


இந்த நிலையில், தற்போது அவரையும் பிரிந்து 4ஆவதாக நடிகை பவித்ரா லோகேஷை பிடித்துள்ளார். இருவரது காதல் விவகாரம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஆனால், இன்னும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏற்கனவே ஒன்றாகவும் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் இருவரும் ஒன்றாக ஹோட்டரில் தனியாக இருந்த போது மூன்றாவது மனைவியான ரம்யா ரகுபதி அவர்களை காலணி கொண்டு அடித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது நரேஷ் விஷில் அடித்துக் கொண்டு ஜாலியாக அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement