• Jul 25 2025

விபத்தில் சிக்கி காலை உடைத்துக் கொண்ட நடிகர் நவ்தீப்- தற்போது அவருடைய நிலை என்ன தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆர்யா மற்றும்  பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நவ்தீப். இப்படத்தினைத் தொடர்ந்து  நெஞ்சில், அஜித்குமாருடன் ஏகன், சொல்ல சொல்ல இனிக்கும், சீறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது வீரமாதேவி படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ள நவ்தீப், சில தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்றார்.இந்நிலையில் நவ்தீப் விபத்தில் சிக்கி காலை உடைத்துக்கொண்ட தகவல் வெளியாகி உள்ளது. 


அவரது உடல் நலம் குறித்து விசாரிக்க வீட்டுக்கு சென்ற நடிகை தேஜஸ்வி அங்கு நவ்தீப் கால் முறிவுக்கு சிகிச்சை எடுத்து கட்டுப்போட்டு ஊன்றுகோல் வைத்தபடி இருக்கும் புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். 


இந்த புகைப்படம் வைரலாகி வருவதோடு நவ்தீப், விரைவில் குணமடைய வாழ்த்தி வலைதளத்தில் பலரும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement