• Jul 25 2025

ரசிகர்களுக்கு தனது வீட்டில் மெகா விருந்து கொடுத்த நடிகர் பிரபாஸ்- வைரலாகும் போட்டோஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியாகிய பாகுபலி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது. இதனால் இவர் பாஃன் இந்திய அளவில் பிரபல்யமான நடிகராக வலம் வருகின்றார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய ராதேஷ்யாம் திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு PAN INDIA படமாக இந்திய அளவில் பிரம்மாண்டமாக வெளியானது.இதனை அடுத்து இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.


 அடுத்ததாக பாலிவுட்டில் அமிதாப்பச்சன் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோருடன் இணைந்து பிரபாஸ், ப்ராஜக்ட் கே எனும் சயின்ஸ் பிக்சன் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தை 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அல்லது 2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 


 இதனிடையே நடிகர் பிரபாஸ் தனது ரசிகர்கள் அனைவரையும் தனது சொந்த ஊரான மொகல்த்துருவில் இருக்கும் தன் வீட்டிற்கு அழைத்து பிரம்மாண்டமாக விருந்து கொடுத்துள்ளார். இதில் நடிகர் பிரபாஸை காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பிரபாஸின் வீட்டை சூழ்ந்தனர். பிரபாஸ் தனது ரசிகர்களுக்கு அளித்த மெகா விருந்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement