• Jul 25 2025

தனது மகள் சினிமாவில் அறிமுகமாவது குறித்து விளக்கம் அளித்த நடிகை ரோஜாவின் கணவர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் செம்பருத்தி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை ரோஜா.இவர் இயக்குநர் செல்வமணியை காதலித்து திருணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். இருந்தாலும் ரோஜா கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் இவரது மகளான அன்ஷுமாலிகா நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமுடன் ஜோடி சேர்ந்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.


இந்நிலையில் தற்போது அன்ஷுமாலிகாவின் தந்தை இயக்குநர் ஆர்.கே செல்வமணி இது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து இருக்கிறார். “சிறுவயதிலிருந்தே பெரிய படிப்பாளி 500 விருதுகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வாங்கியுள்ளார்.

ப்ளஸ் டூ முடித்துவிட்டு அன்ஷுமாலிகா மேற்படிப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கவேண்டும் என்றதையும் நிறைவேற்றி வைத்தோம். தற்போது, பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க, அமெரிக்கா போயிருக்கா. இன்னும் நாலு வருஷம் அமெரிக்காலதான் இருப்பாள்.

அதனால் படத்துல நடிக்கப்போறா, இந்த ஹீரோவுக்கு ஹீரோயினா அறிமுகமாகப்போறா என்பதெல்லாமே வதந்திதான். எந்த செய்தியிலும் உண்மையே இல்லை” என தெரிவித்துள்ளார்.   


Advertisement

Advertisement