• Jul 24 2025

இரண்டு பேருமே என்னோட தம்பிகள் தான் சிரித்துக் கொண்டே சமாளித்த பிரபு- வாரிசு, துணிவு மோதல் குறித்து அளித்த பதில்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் முத்தையா விருமன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மதுரையில் நடைபெறும் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து  காதர்பாஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தினை  இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் ஆர்யா நடிக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. 

இதன் ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக நடிகர் பிரபு, இன்று விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்திருந்தார்.அந்த சமயம்  தூத்துக்குடி விமான நிலையத்தில்  செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரபு, இயக்குநர் முத்தையா இயக்கத்தில் காதர்பாஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, கோவில்பட்டியில் நடைபெற்று வருகிறது. 


அதில் ஆர்யா நாயகனாக நடிக்கிறார். அவருடன் சேர்ந்து நானும் கூட நடிக்கிறேன் எனகூறியிருந்தார்.இந்நிலையில் வாரிசு, துணிவு படங்கள் ஒன்றாக ரிலீஸ் ஆவது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.ரெண்டு படங்களும் வரட்டும், நன்றாக போகட்டும். ரெண்டு பேருமே நம்ம தம்பிகள் தானே ரொம்ப சந்தோசம் என சிரித்தபடி கூறினார்
















Advertisement

Advertisement