• Jul 24 2025

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் இவ்வளவு பிடிக்குமா?- தனலக்ஷ்மி செய்த காரியத்தால் மிரண்டு போன ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது 90 நாட்களைக் கடந்து  ஒளிபரப்பாகி வருவதோடு அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.இந்த சீசனில் பொதுமக்கள் என்கிற அடையாளத்தோடு களமிறங்கிய இரு போட்டியாளர்கள் தான் ஷிவின் மற்றும் தனலக்ஷ்மி. இதில் இருவருமே சிறப்பாக விளையாடி வந்தனர்.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முதல் தனலக்ஷ்மி வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து  டி.ஆர்.பி.யை எகிற வைத்தது தனலகஷ்மி தான் குறிப்பாக அசீமுக்கு எதிராக இவர் போட்ட சண்டைகள் எல்லாம் இந்த சீசனில் மிகவும் பேசுபொருளாக மாறின. 


ஒரு எபிசோடில் கமல்ஹாசனே தனலட்சுமியின் துணிச்சலை பாராட்டி இருந்தார். அந்த அளவுக்கு பலமான போட்டியாளராக தனலக்ஷ்மி இருந்து வந்தார்.அவர் எலிமினேஷன் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக தான் இருந்தது என ரசிகர்களும் தங்களது அதிருப்தியை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்திருந்தனர்.

 பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன பின் தனலக்ஷ்மி எந்தவித பதிவும் போடாமல், பேட்டிகள் எதுவும் கொடுக்காமல் இருந்து வந்ததால், அவர் பிக்பாஸ் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் பரவி வந்தது.


இதெல்லாம் வதந்தி என்பதை நிரூபிக்கும் விதமாக அவர் ஒரு ரீல்ஸ் வீடியோ ஒன்றை போட்டுள்ளார். அதன்படி பச்சைக் குத்தும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் தனலக்ஷ்மி. அதில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் லோகோவை தன் கையில் டாட்டுவாக குத்திக் கொண்டுள்ளார் தனா. இதைப்பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் மீது அம்புட்டு காதலா உனக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.














Advertisement

Advertisement