• Jul 25 2025

கமலின் முக்கிய படத்தில் நடிக்க மறுத்த ரகுவரன்- அடடே இந்த சின்ன பிரச்சினை தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது 5 வயதில் இருந்தே நடித்து வரும் நடிகர் தான் கமல்ஹாசன்.தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் இறுதியாக தனது 68வது வயதில் அண்மையில் வெளியாகியிருந்த விக்ரம் படத்தில் நடித்திருந்தார். இப்படம் மெகா ஹிட் வெற்றி பெற்றது என்றால் மிகையாகாது.

இவர் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால், அது என்ன காரணமோ அவர் ரகுவரனுடன் கடைசி வர நடிக்கவே இல்லை. அதேபோல், ரகுவரனும் சினிமாவில் 30 வருடங்களுக்கு மேல் பல திரைப்படங்களில், பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் அசத்தலான நடிப்பை கொடுத்துள்ளார். ஆனால், அவரும் கடைசி வரை கமலுடன் நடிக்கவே இல்லை.


தன்னைவிட நன்றாக நடிக்கும் நடிகர்களை கமல் தன்னுடன் நடிக்க வைக்க மாட்டார் எனவும், தன்னை விடவும் சிறப்பாக நடித்துவிட்டார் அவர்கள் தொடர்பான காட்சிகளை எடிட்டிங் அறையில் வெட்டி விடுவார். இதனால்தான் கமல் படங்களில் நடிப்பதை ரகுவரன் தவிர்த்தார் என்றும் பயில்வான் ரங்கநாதன் ஒரு யூடியூப் வீடியோவில் கூறியிருந்தார். இந்த கருத்தை பலரும் நம்புகின்றனர். ஆனால், அதில் உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து இப்போது வரை பேசப்படும் ‘நாயகன்’ படத்தில் நாசர் வேடத்தில் முதலில் நடிக்கவிருந்தது ரகுவரன்தானாம். ஆனால், அந்த வேடத்திற்காக தன்னால் முடியை வெட்டமுடியாது என ரகுவரன் மறுத்துவிட்டதால் அவருக்கு பதில் நாசர் நடித்துள்ளார்.


இந்த தகவலை ரகுவரனின் மனைவியும், நடிகையுமான ரோகிணியே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மேலும் ‘கமல் சார் எவ்வளவோ திறமையான நடிகர்களுடன் நடித்துள்ளார். அவரும் ஒரு சிறந்த நடிகர். ரகுவரனை பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் கமல் சாருக்கு இல்லை. இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை என்பதுதான் நிஜம்’ எனவும் அந்த பேட்டியில் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement