• Jul 25 2025

முன்னாள் கணவர் செய்த கடத்தல் விவகாரத்தில் நடிகை மஞ்சுவாரியாரிடமும் குறுக்கு விசாரணை நடத்த உத்தரவு- அதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகை மஞ்சு வாரியார். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தார்.இப்படத்தின் மூலம் சிறந்த வரவேற்பையும் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து அண்மையில் வெளியாகிய அஜித்தின் துணிவுபடத்திலும் நடித்திருந்தார்.இப்படம் அவரக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்ததால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர் நடித்து வருவார் என்று நம்பப்படுகின்றது.


இந்த நிலையில் கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நடிகை கடத்தி தாக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக நடிகர் திலீப், பல்சர் சுனீல் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக 39 சாட்சிகளிடம் முதல் கட்டமாக 27 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. 12 பேரிடம் விசாரணை நடைபெறாமல் இருந்தது.


இந்நிலையில் 2-ம் கட்ட குறுக்கு விசாரணைக்கு 20 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஓப்படைக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியர் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவர் உள்பட 20 பேர் இன்று குறுக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.




Advertisement

Advertisement