• Jul 25 2025

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் ராம் சரண்.!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் மெகா பவர் ஸ்டாராக வலம்வரும் ராம் சரணுக்கு உலகெங்கும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவருக்கு குறிப்பாக ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம்.

இந்நிலையில், ஹைதராபாத் ஸ்பர்ஷ் ஹாஸ்பிஸ் மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 9 வந்து சிறுவன் ரவுலா மணி குஷால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அவர் நடிகர் ராம் சரணின் ரசிகராக இருந்து வந்த நிலையில், அவரை நேரில் பார்க்க விரும்பியுள்ளார். அவரின் விருப்பத்தை மேக்யவிஷ் பவுண்டேசன் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

அவர்கள் நடிகர் ராம் சரணுக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்க, ராம் சரண் குழந்தையை நேரில் சந்தித்து பேசினார். அவரின் குடுப்பதிற்கும் நம்பிக்கை கூறி, தன்னால் இயன்ற உதவியை செய்வதாகவும், குழந்தைக்காக பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement