• Jul 25 2025

சித்தார்த், கியாராவிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் ராம் சரணின் மனைவி- அடடே இது தான் காரணமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில், சாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் கியாரா அத்வானி. தற்போது தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், Shershaah என்கிற படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இந்த நிலையில்  சித்தார்த் மல்ஹோத்ராவும், கியாரா அத்வானியும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் சூர்யகார் அரண்மனையில் திருமணம் செய்து கொண்டனர்.இந்தத் திருமணத்தில் குடும்பத்தார்,பிரபலங்கள் என்று ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டார்கள்.


இந்நிலையில் தான் நடிகர் ராம் சரணின் மனைவியான உபாசனா சித்தார்த், கியாராவிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.சமூக வலைதளத்தில் உபாசனா கூறியிருப்பதாவது, வாழ்த்துக்கள். இது மிகவும் அழகாக இருக்கிறது. எங்களால் திருமணத்திற்கு வர முடியவில்லை, சாரி என தெரிவித்துள்ளார்.

ராம் சரணோ, இது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம், வாழ்த்துக்கள் என இன்ஸ்டா ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.உபாசனா கர்ப்பமாக இருக்கிறார். அதனால் அவர் ராஜஸ்தான் வரை பயணம் செய்ய முடியாத நிலையாக இருக்கும். இருந்தாலும் பெருந்தன்மையாக பப்ளிக்காக சாரி சொல்லியிருக்கிறார் என்கிறார்கள் ரசிகர்கள். 


திருமணத்தில் பிற நடிகைகளே போன்று சிவப்பு நிற உடை அணியாமல் கியாரா வித்தியாசமாக உடை அணிந்தது அனைவரையும் கவர்ந்துவிட்டது. மனிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த உடையில் கியாரா தேவதை போன்று இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா ஜோடி ரொம்ப க்யூட் என்கிறார்கள் ரசிகர்கள்.


Advertisement

Advertisement