• Jul 24 2025

சூர்யா 42’ பட ஹீரோயினின் மிரள வைக்கும் ஸ்டண்ட் வீடியோ- அசந்து போன நடிகை சமந்தா

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சூர்யா தற்பொழுது தனது 42வது படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார்.இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். 

இப்படத்தின் மூலம் அவர் கோலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்க உள்ளார். சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பை கோவாவில் நடத்திய படக்குழு, பின்னர் சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கை நடத்தியது. 


இதற்கு அடுத்தபடியாக அப்படத்தில் இடம்பெறும் வரலாற்று பகுதிகளை படமாக்க பிஜி தீவிற்கு சென்றுள்ளனர். அங்கு பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம்.இந்நிலையில், சூர்யா 42 படத்தில் ஹீரோயினாக நடிக்கும் பாலிவுட் நடிகை திஷா பதானியின் ஸ்டண்ட் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

நின்ற இடத்திலேயே சுழன்று, சுவற்றில் மிதித்து ஜாக்கி சான் போல் மின்னல் வேகத்தில் பறந்து பறந்து அவர் சண்டைபயிற்சி மேற்கொள்ளும் வீடியோ காட்டுத்தீ போல் பரவி வருகிறது.இதைப்பர்த்து வியந்து போன நெட்டிசன்கள் சூர்யா 42 படத்தில் தரமான சம்பவம் இருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.


 ஒருசிலரோ திஷா பதானியை பொம்பள ஜாக்கிசான் என வர்ணித்து வருகின்றனர்.இந்த வீடியோவை பார்த்து வியந்துபோன நடிகை சமந்தா வெறித்தனமாக இருப்பதாக பாராட்டி உள்ளார். இதன்மூலம் சூர்யா 42 படத்தில் திஷா பதானி ஆக்‌ஷன் ஹீரோயினாக மிரட்டி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement