• Jul 24 2025

இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற பயில்வான் ரங்கநாதன்.. வாழ்த்து தெரிவித்த முக்கிய பிரபலம்...எப்புட்றா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சினிமா பத்திரிகையாளரும், படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தும் பிரபலமானவர் பயில்வான் ரங்கநாதன். மேலும் இவர் முந்தானை முடிச்சு, தர்மதுரை, ஜெய்ஹிந்த், தெனாலி, வில்லன், பகவதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தி உள்ளார்.

மேலும் இவர் தற்போது சினிமா குறித்தும் திரைத்துறை நடிகர், நடிகைகள் குறித்தும் பல விஷயங்களை  சோசியல் மீடியாவின் வாயிலாக பகிர்ந்து வருகிறார். இவர் மீது திரைப்பிரபலங்கள் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறுஇருக்கையில், பயில்வான் ரங்கநாதன் குறித்த இயக்குநர் வெங்கட் பிரபுவின் சோசியல் மீடியாவில்  ஒரு பதிவை இட்டுள்ளார்.அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில், "இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் "இசை வெல்லம்" பயில்வான் ரங்கநாதன் சாரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக மனமார்ந்த வாழ்த்துகள். 

எங்களுக்கு செம்ம பெருமையான தருணம், உங்கள் பணியின் பெரிய ரசிகன் சார். மேலும் விவரங்களுக்கு நாளை மாலை 5 மணிக்கு ஜி.வி.பிரகாஷ் பதிவை பார்க்கவும்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.



Advertisement

Advertisement