• Jul 25 2025

போலீஸ் நிலையத்திற்கு விரைந்த நடிகர் ரவி மரியா -நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சில படங்களை இயக்கிய பின் குணச்சித்திர நடிகராக அறிமுகம் ஆகி தற்போது தமிழ் திரையுலகில்  கலக்கிக் கொண்டிருப்பவர் ரவி மரியா.

மேலும் அவர் கூர்க்கா, தேசிங்குராஜா உள்ளிட்ட பல படங்களில் காமெடியாக நடித்து இருப்பார். அதிலும் குறிப்பாக தேசிங்கு ராஜா படத்தில் 'மாப்ளைக்கு அவ்ளோ வெறி' என சூரியை பார்த்து அவர் சொல்லும் வசனம் தற்போதும் மீம் டெம்ப்லேட் ஆக இணையத்தில் இருந்துகொண்டிருக்கிறது.


ரவி மரியா பிரபல நடிகராக இருக்கும் நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் பெயரில் யாரோ சிலர் போலியான இன்ஸ்டா கணக்கு தொடங்கி பணம் பறித்து வருவதாக போலீசில் புகார் தெரிவித்து இருக்கிறார்.

அதனால் இன்ஸ்டாகிராமில் தன் பெயரில் யாரவது பணம் கேட்டு மெசேஜ் செய்தால் நம்ப வேண்டாம், பணம் எனுப்பி ஏமாற வேண்டாம் என கூறியுள்ளார்.


Advertisement

Advertisement