• Jul 24 2025

அனிருத் பகிர்ந்த அந்த வீடியோ...வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

2012 ஆம் ஆண்டு தனுஷ் - ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான படம் 3. இதில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் அனிருத். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த வொய் 'திஸ் கொலவெறி பாடல்' மாஸ் ஹிட் அடிக்க, தமிழக ரசிகர்களிடத்தே பிரபலமானார் அனிருத். எனினும் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி, கத்தி, காக்கி சட்டை என அடுத்தடுத்து தனது இசையால் பலகோடி ரசிகர்களை ஈர்த்தவர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் குமார், விஜய் உள்ளிட்டோர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார் அனிருத்.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ, நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் ஜெயிலர், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் -2 படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.


ஏற்கனவே, டாக்டர், கோலமாவு கோகிலா, பீஸ்ட் ஆகிய படங்களில் அனிருத்துடன் இணைந்து பணியாற்றினார் நெல்சன்.எனினும்  தற்போது ஜெயிலரில் மீண்டும் இந்த கூட்டணி அமைந்துள்ளது. இதுவே ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 அதேபோல, லோகேஷ் கனகராஜ் யூனிவெர்சில் லியோ இருக்கிறதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இந்த காம்போவும் மக்களுடைய ஃபேவரைட் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பிஸியான சூழலில் இருக்கும் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய சிறுவயது புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.


கீபோர்ட் வாசித்தபடி அமர்ந்திருக்கும் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள நிலையில் பின்னணியில் வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை" பாடல் ஒலிக்கிறது. இந்த ட்வீட் ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பரவி வருகி்றது.


Advertisement

Advertisement