• Jul 25 2025

எல்லாத்தையும் இழந்த நடிகர் சசிகுமார்.. வேற வழி இல்லாமல் கடனை அடைக்க தப்பான படம்... அவரே கூறிய உண்மை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல திரைப்பட நடிகரும் இயக்குநருமான சசிக்குமார் நடிப்பில் சமீபத்தில் 'அயோத்தி' திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படத்திற்கு மக்கள் கொடுத்த அமோக வரவேற்பை தொடர்ந்து இவர் பல பேட்டிகளில் கலந்து தன்னுடைய கடந்தகால அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்து வருகின்றார்.


அவ்வாறான ஒரு பேட்டியில் அவர் பேசுகையில் "நான் ஆரம்பத்தில் எல்லாத்தையும் இழந்திட்டேன், கடனாகிடிச்சு. உயிராக இருக்கிற அசோக்கை இழந்து விட்டேன். எல்லாமே இழந்திட்டேன். சுற்றி எவ்வளவோ பேர் இருந்தாங்க. ஆனால் அதுக்கு அப்புறமாக யாருமே இல்லை. கடைசி வரைக்கும் இருப்பாங்க என்று நினைச்ச நண்பர்கள் இல்லை. 


எனக்கு தெரிஞ்ச எல்லாமே சினிமா தான். வேற வழியில்லாமல் கடனை அடைப்பதற்காக தப்பான படம் பண்ணினேன். நாம விழுந்தால் நாம தான் ஊன்றி எழுந்திருக்கணும். இன்னொருவர் வந்து தூக்கி விடுவாங்க என்று நினைக்கவே கூடாது. ஒரு வருஷமாக நான் சரியாய் கஷ்டப்பட்டேன். அதுக்கு அப்புறமாக கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து வெளியே வந்தேன்" எனக் கூறியிருந்தார்.

Advertisement

Advertisement