• Sep 11 2025

ப்ப்பா..ஜெயம் ரவியின் ''அகிலன்' திரைப்படம் தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை திரையரங்குகளிலா? வெளியான தகவல் இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் ஜெயம் ரவி, பிரியா பவானி ஷங்கர், தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் 'அகிலன்'. ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்தப் படத்தை கல்யாண் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். 

அதுமட்டுமல்லாது பூலோகம் படத்துக்குக்குப் பிறகு ஜெயம்ரவி - கல்யாண் கிருஷ்ணன் கூட்டணி இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். மேலும் சாம் சி.எஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.  

மார்ச் 5ஆம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்தது.நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகும் 28வது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நினையில் அகிலன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.இந்நிலையில் இந்த படம், தமிழகம் முழுவதும் சுமார் 500+ திரையரங்க திரைகளில் வெளியாகி உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement