• Jul 25 2025

3 வயது ஆண் சிங்கத்தை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்- விமர்சித்து வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பொதுவாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, சாதிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. விட முயற்சியும், போராடும் குணமும் இருந்தால் மட்டுமே வாய்ப்புகள் வசப்படும். அப்படி வசப்படும் வாய்ப்புகளை வெற்றியாக மாற்றும் வித்தகராகவும் இருக்க வேண்டும். 

அப்படி தனக்கான படிகளை தானே செதுக்கி கொண்டு ஏறத்துவங்கிய சிவகார்த்திகேயனை, பின்னர் மக்களே வெற்றி நாயகன் என்கிற பட்டத்தை கொடுத்து, தற்போது டாப் நடிகர்கள் பட்டியலில் ஏற்றி அழகு பார்த்து வருகிறார்கள். ஆரம்பத்தில் இருந்து காமெடி கலந்த ஹீரோவாக நடித்த சிவகார்த்திகேயன், சமீப காலமாக ஆக்ஷன் மற்றும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் படங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். 


அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான 'டாக்டர்' மற்றும் 'டான்' ஆகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததோடு ரூ.100 கோடிக்கு மேல் கலெக்‌ஷனையும் அள்ளியது. மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த மாதம் 14 ஆம் தேதி வெளியாக உள்ள 'மாவீரன்' திரைப்படம், ரசிகர்களால் மிகவும் எதர்பார்க்க கூடிய படங்களில் ஒன்றாக உள்ளது. 

காரணம் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக விருமன் பட நாயகி அதிதி ஷங்கர் நடிக்கிறார். அதேபோல் வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சிவகார்த்திகேயன் வண்டலுார் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ஷேரு என்ற 3 வயது சிங்கத்தை 6 மாதத்திற்கு தத்தெடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement