• Jul 25 2025

நடிகர் வடிவேலுக்கு அது இருந்ததே இல்லை, இப்போ எப்பிடி என்று தெரியல- ஓபனாகப் பேசிய பிரபல சீரியல் நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் உள்ள காமெடி ஜாம்பவான்களில் மிகவும் முக்கியமானவர் தான் நடிகர் வடிவேலு. இவர் தற்பொழுது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார். அந்த வகையில் இறுதியாக சந்திரமுகி2 படத்தில் மீண்டும் முருகேஷன் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

இது தவிர மாமன்னன் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். அத்தோடு தொடர்ந்து படவாய்ப்புக்களும் வடிவேலுக்கு குவிந்து வருகின்றன. இந்த நிலையில் வடிவேலு பற்றி பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியலில் நடித்த நடிகை ராதா ஒரு சுவாரஸியமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.


நடிகை ராதா வடிவேலுவுடன் இணைந்து சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்திருந்தார்.அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதாவது வடிவேலு மிகவும் சப்போர்ட் செய்வாராம். அன்பாக இருப்பாராம். பேசுவாராம். நட்பாகவும் இருப்பாராம்.ராதா டையலாக் எப்படி பேசுகிறார் என்பதை உள்வாங்கிக் கொண்டு அதற்கேற்றவாறு கோ-ஆப்ரேட் பண்ணி பேசுவாராம். 


இப்பொழுது எப்படி என்று தெரியவில்லை. ஆனால் அப்பொழுதெல்லாம் வடிவேலுவுக்கு பொறாமை என்ற ஒன்று இருந்ததே இல்லை என்றும் நாங்கள் எல்லாரும் ஒன்றாக அமர்ந்துதான் சாப்பிடுவோம் என்றும் ராதா கூறினார். இது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement