• Jul 25 2025

பிக்பாஸ் சீசன் 7 வீட்டிற்குள் இதுவரை என்ட்ரி கொடுத்த பிரபலங்கள் யார் தெரியுமா?- அடடே... இவரெல்லாம் வருகின்றாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிரபல ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் நாளைய தினத்திலிருந்து ஒளிபரப்பப்படவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் இருக்கின்றனர்.

மேலும் ஒவ்வொரு சீசனிலும் ஒரு வீடு மட்டுமே இருக்கும். ஆனால் இந்த முறை இரண்டு வீடுகளும்  20 போட்டியாளர்களும் பங்கேற்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இன்றைய தினம் இதன் ஆரம்பமாகியுள்ளது. அவர்களில் இறுதியாக பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தவர்களில் சிலரது பெயர்கள் தெரியவந்துள்ளது.


அதன்படி, பிக் பாஸ் சீசன் 7ல் 90ஸ் ஃபேவரைட் நடிகர் பப்லு பிருத்விராஜ் கலந்துகொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சினிமாவில் சான்ஸ் இல்லாததால் சீரியல்களில் நடித்து வந்த பப்லு, சமீபத்தில் தான் இரண்டாவது திருமணம் செய்ததாக செய்திகள் வெளியாகின. அவர் தற்போது பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்றுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதேபோல், நடிகர் கூல் சுரேஷும் இந்த சீசனில் பங்கேற்றுள்ளாராம். கூல் சுரேஷும் தற்போது சினிமாவில் வாய்ப்பில்லாமல் திரைப்பட ப்ரொமோஷன் நிகச்சிகளில் பங்கேற்று வந்தார். கன்டெண்ட் கண்டெய்னரான கூல் சுரேஷ் இப்போது பிக் பாஸ் வீட்டிலும் செம்ம என்டர்டெயினராக இருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 


தொடர்ந்து பாடகரும் நடிகருமான யுகேந்திரனும் பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்றுள்ளாராம். இவர் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் ஆவார்.கடந்த சில ஆண்டுகளாகவே சினிமாவிலும் பாடுவதற்கும் சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 7 யுகேந்திரனுக்கு கம்பேக் கொடுக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இவர்களுடன் சீரியல் நடிகை ரவீனா தாஹா உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement

Advertisement