• Jul 23 2025

ரூல்ஸ் மீறியதற்காக ஆன்லைன் மூலம் அபராதத் தொகையை செலுத்திய நடிகர் விஜய்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தளபதி விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வந்த லியோ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதை அடுத்து நேற்று சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் 234 தொகுதி நிர்வாகிகளுடான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் இருந்து காரில் நடிகர் விஜய் புறப்பட்டு பனையூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் வருவதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் அவரது காரை முன்னும் பின்னும் துரத்தி வந்தனர். இதனால், அக்கரை ஜங்ஷன் போக்குவரத்து சிக்னலில் விதிகளை மீறி நடிகர் விஜய்யின் கார் நிற்காமல் சென்றது. இதுதொடர்பான வீடியோ வைரலானது.


இதனையடுத்து போக்குவரத்து சிக்னலை மீறியதாக சென்னை போக்குவரத்து காவல்துறை நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதித்து உள்ளது. 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ல்,ம் தேதி சென்னை பனையூரில் மக்கள் இயக்க அலுவலகத்தில், ரசிகர்களை விஜய் சந்தித்தார். அப்போது, நடிகர் விஜய் வந்த காரின் கண்ணாடியில், கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிய காரணத்துக்காக அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

அதே போல நேற்றைய தினம் விதிக்கப்பட்ட அபராதத்திற்கும் விஜய் ஆன்லைன் மூலம் 500 ரூபாயை செலுத்தியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement