• Jul 24 2025

கரிகாலனை அடிக்கப் போன தர்ஷினி... ஞானத்திடம் கொந்தளிக்கும் குணசேகரன்... விறுவிறுப்பான 'எதிர்நீச்சல்' ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றதது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. 

இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் குணசேகரன் ஞானத்திடமும், கரிகாலனிடமும் "பொம்பிளைங்களை எப்படி நடத்தணுமோ, அப்படி நடத்தணும்" எனக் கூறுகின்றார்.


அதற்கு கரிகாலன் "ஆதிரை மேல நான் வச்சிருக்கிற காதல் என்னைத் தடுக்குது" என்கிறார். பதிலிற்கு குணசேகரன் "பெரிய ரோமியோ, யூலியட் காதல் அப்படியே நிலாவில் இருந்து இரண்டு பேரும் குதிச்சீங்களாக்கும்" எனக் கூறுகின்றார். 


மறுபுறம் தர்ஷினியிடம் குணசேகரன் "நீ கரிகாலனை அடிக்கப் போனியா, மாமன் கிட்ட மன்னிப்பு கேளு" என்கிறார். பதிலிற்கு தர்ஷினி முடியாது எனக் கூறிவிட்டு செல்கின்றார். அதற்கு குணசேகரன் எழுந்து "இதுக்கப்புறம் நாம எதுக்கு மீசையை முறுக்கிட்டு திரியணும்" எனக் கேட்கின்றார்.  

Advertisement

Advertisement