• Jul 25 2025

தமிழகம் எங்கும் துடங்கப்படும் நடிகர் விஜயின் புதிய திட்டம்... அமுலுக்கு வருகிறது விஜய் தொழிற்சங்கஇயக்கம்

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்க தொழில் சங்கம் துடங்கப்படும் என்று கடலூரில் விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இது தொடர்பாக பார்ப்போம் வாங்க


கடலூரில் விஜய் மக்கள் இயக்க தொழில் சங்கம் சார்பில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சீருடை வழங்கும் விழா நடைபெற்றது. மேலும் விஜய் படத்தினுடன் கூடிய ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டது.


அதன் பிறகு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட  புஸ்ஸி ஆனந்த் கடலூர் மாவட்டத்தில்  கடந்த 3 ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கத்தினுடைய தொழில் சங்கம் செயற்பட்டு வருகிறது அதனை அடுத்து விரைவில் தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்க தொழிற்சங்கங்கள் துடங்கப்படும் என தெரிவித்துள்ளார். 


இரவு நேர பயிலகம், சட்ட ஆலோசனை மையம், விலையில்லா உணவகம் இதனை தொடர்ந்து தொழிற்சங்கங்களும் விரைவில் ஆரம்பமாகி அதன் மூலமாகவும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement