• Jul 24 2025

"உன்னால மட்டும் தான் நான் லோவ் ஆவன்.." பார்ப்போரின் வயித்தெரிச்சலை கிளப்பும் பிக்பாஸ் ப்ரோமோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் எப்படி சண்டைகளுக்கு பஞ்சம் இருக்காதோ அதேபோல் காதல் ஜோடிகளுக்கும் பஞ்சம் இருக்காது. 

பிக்பாஸ் முதல் சீசனில் டாப் போட்டியாளராக இருந்த ஓவியா, அந்த சீசன் டைட்டில் வின்னரான ஆரவ்வை துரத்தி துரத்தி காதலித்தார். இரண்டாவது சீசனில் யாஷிகா ஆனந்த், மகத்தை உருகி உருகி காதலித்தார். மூன்றாவது சீசனில் கவின் - லாஸ்லியா காதலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிக்பாஸ் முடிந்ததும் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டனர்.


இதையடுத்து நான்காவது சீசனில் பாலா - ஷிவானி இடையே ஒரு லவ் டிராக் ஓடியது. ஷிவானியின் அம்மா கண்டித்ததால் அது அப்படியே காத்துவாக்குல கடந்துபோனது. பின்னர் ஐந்தாவது சீசனில் அமீர் - பாவனி இடையே காதல் உருவானது. அவர்கள் இருவரும் தற்போது லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வருகின்றனர். அடுத்த ஆண்டு இந்த ஜோடி திருமணமும் செய்துகொள்ள உள்ளது. ஆறாவது சீசனில் ஒரு ஒருதலைக் காதல் ஜோடியாக ஷிவின் - கதிரவன் இருந்து வந்தனர். 

அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் 7-வது சீசனில் மணி - ரவீனா இருவரும் காதல் ஜோடியாகவே உள்ளே வந்துள்ளனர். அவர்கள் இருவரும் காதலிப்பதை அறிவிக்காவிட்டாலும் அவர்கள் செய்யும் வேலைகளை வைத்து சக ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கண்டுபிடித்துவிட்டனர். 


இன்று வெளியான ப்ரோமோவில், மணி - ரவீனா இருவரும் லவ் மூட்ல கதைக்கும் காணொளி வெளியாகி பார்ப்போரின் வயித்தெரிச்சலை பெற்று வருகிறது.

அதன்படி, "வர வர என்ன நீங்க கண்டுக்க மாட்டன் என்றீங்க.பேச மாட்டன் என்றீங்க" என்டு மணி சொல்ல, "என்ன பிரச்சனை உனக்கு" என்டு வெட்கத்தோடு ரவீனா கேக்க. இந்த "வீட்ல நான் லோவ் ஆனா ஒரு விசயத்துக்கு மட்டும் தான் லோவ் ஆவன். அது என்ன என்டு உனக்கு தெரியும்.நீங்க எனக்கு அட்டெஞ்சன் கொடுக்கல என்டா தான் எனக்கு காண்டகுது". என்டு மணி சொல்லுகிறார்.



Advertisement

Advertisement