• Jul 26 2025

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்து ஹவுஸ்மேட்ஸை குஷிப்படுத்திய நடிகை அஞ்சலி- வந்ததுமே செம பஃண் தான் போல

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது ஆரம்பித்து தற்பொழுது சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.இதில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்பதால் போட்டியாளர்கள் டாஸ்க்கினை கடுமையாக விளையாடி வருகின்றனர்.அத்தோடு யார் இந்த வாரம் வெளியேறப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகின்றது.

அதன்படி இந்த வாரம் கதாப்பாத்திரங்களாக மாறி நடனம் ஆடுவது நடிப்பது என தமது திறமையைக் காட்டி வருகின்றனர்.இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகை அஞ்சலி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அதாவது அஞ்சலி நடித்துள்ள வெப் தொடர் தான் “ஃபால்”.இந்தத் தொடரானது நாளைய தினம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நாளைய தினம் வெளியாகவுள்ளது. இத்தொடரில் எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் , ராஜ்மோகன் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இதனை ப்ரமோஷன் செய்வதற்காகவே இந்த குழுவினர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.அஞ்சலி, நடிகர் சந்தோஷ் பிரதாப் மற்றும் யூடியூப் பிரபல பேச்சாளர் ராஜ்மோகன் ஆகியோர் ஹவுஸ்மேட்ஸிடையே கலகலப்பாக பேசுகின்றனர். அத்துடன் ஃபால் பட கதைப்படி மாடியில் இருந்து அஞ்சலியை யாரோ தள்ளிவிட, அவர் கோமாவுக்கு போகிறார். 


தள்ளிவிட்டது யார் என்பதுதான் கதை. இதனால் பிக்பாஸ் வீட்டிலும் அஞ்சலி விழுந்தால் தாங்கிப்பிடிக்க தயாராக இருப்பதாக ஹவுஸ்மேட்ஸ் சிலர் அலப்பறை செய்ய, அஞ்சலியோ சந்தோஷ் பிரதாப் விழுவார், அவரை பிடியுங்கள் என கலாய்க்கிறார்.இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement