• Jul 25 2025

40வயதிலும்... நடிகை சோனியா அகர்வால் வெளியிட்ட கிளாமர் புகைப்படம்...!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் 'காதல் கொண்டேன்' என்ற படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அறிமுகமாகி முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சோனியா அகர்வால். அறிமுகப் படத்திலேயே தனது திறமையான நடிப்பின் வாயிலாக ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தவர். இதனைத் தொடர்ந்து இவர் '7ஜி ரெஜின்போ காலனி, மதுர, கோவில், புதுப்பேட்டை' போன்ற பல படங்களில் நடித்திருக்கின்றார்.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

சினிமாத் துறையில் நுழைந்து குறுகிய காலத்திலேயே அவர் இயக்குநர் செல்வராகவனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். எனினும் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக திருமணமான சில ஆண்டுகளுக்குள்ளேயே விவாகரத்துப் பெற்றுக் கொண்டனர்.

தற்போது படங்களில் கமிட்டாகி அவ்வப்போது படங்கள் நடித்து வருகிறார்.

தற்போது அவர் உடல்எடையை குறைத்து வேறொரு லுக்கில் இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட ரசிகர்கள் அட நம்ம சோனியாவா இது என ஷாக் ஆகி பார்க்கின்றனர்.







Advertisement

Advertisement