• Jul 25 2025

சர்வதேச திரைப்பட விழாவில் 'பனோரமா' விருது வென்ற நடிகை காயத்ரி... அதுவும் எந்தப் படத்திற்காக தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'மாமனிதன்'. இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அத்தோடு இளையராஜா - யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்திருந்தனர். 


அதுமட்டுமல்லாது 2 குழந்தைகளின் தாயாக வித்தியாசமான தோற்றத்தில், இயல்பாக தோன்றியிருந்தார் நடிகை காயத்ரி. அவரது முகத்துக்கே உரிய மென்சோகம் மாமனிதன் கதைக்கு மிகவும் உதவியது. வணிக சமரசங்களுக்கு அப்பாற்பட்டு சீனு ராமசாமி மாமனிதன் திரைப்படத்தை சிறப்பாக செதுக்கியிருந்தார்.

இந்நிலையில் மாமனிதன் படத்தில் நடித்தமைக்காக ஜெய்ப்பூர் சர்வதேச திரை விழாவில் சிறந்த நடிகைக்கான  'பனோரமா' விருது நடிகை காயத்ரிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement