• Jul 24 2025

மாவீரன் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை..'எல்லாத்தையும் மேல இருக்குறவன் பாத்துப்பான்”...ட்ரோல் செய்யும் ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

 சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் மாவீரன்.மடோன் அஷ்வின் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இதனையடுத்து மாவீரன் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், சிவகார்த்திகேயன் நடிப்பை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. 

நேற்று வெளியான மாவீரன் ட்ரெய்லரில் சிவகார்த்திகேயனின் ஃபயர் தெரிகிறது என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். மடோன் அஸ்வின் இயக்கத்தில் காமிக்ஸ் கதை பின்னணில் இந்த படம் உருவாகியுள்ளதும் உறுதியாகியுள்ளது. சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் மாவீரன் ட்ரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், சிவகார்த்திகேயனின் குறிப்பிட்ட ஒரு சீனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் காமிக்ஸ் ஸ்க்ரிப்ட் மேக்கராக நடித்துள்ளதாக தெரிகிறது. எப்போதும் பயந்த சுபாவம் கொண்ட அவருக்கு மேலே பார்த்தால் எனர்ஜி கிடைப்பதும், அதன்பின்னர் ஆக்‌ஷனில் வெளுத்து வாங்குவதுமாக நடித்துள்ளார். திடீரென தலையை உயர்த்தி மேலே பார்க்கும் காட்சிகளில், சிவகார்த்திகேயனுக்காக ஒரு வசனத்தை குறிப்பிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஆவாரம்பூ படத்தில் கவுண்டமணி, பயில்வான் ரங்கநாதன் நடித்த ஒரு காமெடி காட்சியில், "எல்லாத்தையும் மேல இருக்குறவன் பாத்துப்பான்" என்ற ஒரு வசனம் வரும். இந்த வசனத்தை மாவீரன் ட்ரெய்லரில் சிவகார்த்திகேயன் மேலே பார்க்கும் காட்சியில் சிங்க் செய்துள்ளனர் நெட்டிசன்கள். அதுமட்டும் இல்லாமல் மேலே பார்த்துக்கொண்ட படம் பார்ப்பவர்கள் சார்பாக மாவீரன் வெற்றிபெற வாழ்த்துகள் எனவும் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.


Advertisement

Advertisement