• Jul 23 2025

குண்டானது ஒரு குற்றமா..? உருவக் கேலியால் வருந்தும் நடிகை ஹனிரோஸ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'முதல் கனவே, சிங்கம்புலி, காந்தர்வன்' உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹனிரோஸ். இருப்பினும் இவர் தமிழைத் தாண்டி மலையாளத்தில் தான் முன்னணி நடிகையாக இருக்கிறார். அதுமட்டுமல்லாது தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். 


அந்தவகையில் வீரசிம்மா ரெட்டி படத்தில் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குண்டாக இருப்பதால் தன்னை வலைத்தளங்களில் உருவ கேலி செய்வதாக ஹனிரோஸ் சமீபத்தில் வருத்தம் தெரிவித்து உள்ளார். 


இதுகுறித்து நடிகை ஹனிரோஸ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் "சினிமாவில் கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி எனது ஆடைகள் இருக்கும். எனக்கு பிடித்த மாதிரி காட்சி அளிக்கவே நான் விரும்புவேன், எதுமாதிரியான உடைகள் அணிய வேண்டும், எப்படி காட்சி அளிக்க வேண்டும் என்பது நடிகர், நடிகைகளின் விருப்பம்" என்றார்.


மேலும் "கதாநாயகிகள் கொஞ்சம் எடை கூடி குண்டானால் உடனே வலைத்தளத்தில் கேலி செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். நானும் இதை எதிர்கொண்டு உள்ளேன். இஷ்டம்போல் சமூக வலைத்தளங்களில் எதிர்மறையாக மோசமாக பேசி மனதை நோகடிக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது'' என்று வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.

Advertisement

Advertisement