• Jul 25 2025

குளிக்கும் வீடியோவைப் பதிவிட்ட நடிகை கஸ்தூரி- மோசமாக குவிந்த கமெண்ட்டுகள்- அவரே கொடுத்த ‘நச்’ ரிப்ளை

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் 80களில்  முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டார். தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இயங்கி வருகிறார் கஸ்தூரி. அதில் அரசியல் குறித்து,சமூக நிகழ்வுகள் குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.


அதேபோல் சில சமயங்களில் தனது போட்டோஷுட் புகைப்படங்கள் மற்றும் தான் சுற்றுலா சென்றபோது எடுத்த வீடியோக்களையும் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் கஸ்தூரி.அந்த வகையில்,சமீபத்தில் நீச்சல் உடை அணிந்து நீச்சல் குளத்தில் குளித்தபோது எடுத்த வீடியோவை பதிவிட்டு இருந்தார் .


கஸ்தூரியின் குளியல் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதற்கு ஏராளமான கமெண்ட்டுகளையும் பதிவிட்டு வந்தனர். குறிப்பாக முகம் சுழிக்கும் வகையில் ஆபாசமான கமெண்ட்டுகளும் அதிகம் பதிவிடப்பட்டு வந்தன. அவ்வாறு கமெண்ட் செய்தவர்களை கஸ்தூரி வெளுத்துவாங்கப் போகிறார் என இணையவாசிகள் காத்திருந்தனர்.


ஆனால் அவரோ கூலாக பதிலடி கொடுத்துள்ளார்.ஆபாச பேச்சுக்கள் வேண்டாம். நற்பண்பு கொண்டவராக நடந்து கொள்ளுங்கள் என கஸ்தூரி அந்த ஆபாச கமெண்டுகளுக்கு ரிப்ளை செய்துள்ளார். சிலரோ கஸ்தூரி, வயதானாலும் இளமையுடன் இருப்பதாக அவரை அழகைப் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement