• Jul 25 2025

அசீம் வெற்றி பெற்றது கமல்ஹாசனுக்கு பிடிக்கவில்லையா?- உறுதி செய்த பிக்பாஸ் போட்டியாளர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த ஆக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இந்த ஞாயிற்றுக்கிழமை மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த சீசனில் கமல்ஹாசன் அடிக்கடி சொல்லும், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல அசீமின் வெற்றி அமைந்து இருந்தது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சண்டை, கோவம், ஆத்திரம், காதல், ரொமான்ஸ் என அனைத்தும் நிறைந்து இருந்தது. இந்த சீசனில் அதிகம் பேசப்படும் நபராக அசீம் இருந்தார். எதற்கு எடுத்தாலும் சண்டை, வாக்குவாதம் செய்த அசீமால் வீடே எப்போதும் ஹாட்டாக இருந்தது. இதனால், போட்டியாளர்கள் இவர் வெளியில் சென்றால் தான் நிம்மதி என நினைத்து அடிக்கடி நாமினேட் செய்தனர்.


இதுவரை 11 முறை நாமினேஷனில் சிக்கிய அசீம் எலிமினேஷன் ஆகாமல் தப்பித்தார். அதற்கு காரணம் ஆடியன்ஸ் பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக செல்ல அசீம் இருக்க வேண்டும் என நினைத்து அவரை வாக்களித்து காப்பாற்றினார்கள். இதனால், வீருகொண்ட சிங்கம் போல மேலும் பலரை உதாசீனமாக பேசினார்.


இதையடுத்து, அசீம்,விக்ரமன்,ஷிவின் மூன்று பேரும் பைனலுக்கு தேர்வான நிலையில், விக்ரமன் நிச்சயம் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிக வாக்குகளை பெற்ற அசீம், பிக் பாஸ் சீசன் 6 டைட்டிலை தட்டித்தூக்கினார். இதையடுத்து, அசீமுக்கு, 50 லட்சம் ரூபாய் பணமும், ஆடம்பர காரும் பரிசாக வழங்கப்பட்டது.


இதனால் BoycottVijayTv போன்ற டாக்குகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.மக்கள் பலரும் அசீம் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கமல்ஹாசனுக்கும் அசீம் வெற்றிப்பெற்றது பிடிக்கவில்லை, அவர் சில காரணத்தால் தான் வெற்றியாளரை அறிவித்திருப்பார், இந்த புகைப்படம் அதனை வெளிப்படுத்துகிறது என ஒரு ரசிகர் கமெண்ட் போட்டிருக்கிறார்.அந்த பதிவை உண்மை என கூறியுள்ளார் பிக்பாஸ் 6 போட்டியாளர் மகேஷ்வரி என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement