• Jul 24 2025

ஒற்றை கம்பியில் இரண்டு கையையும் விட்டுவிட்டு பம்பரமாக சுற்றிய நடிகை கீர்த்தி- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் என்பதும் அவருக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் இருக்கின்றனர்.

அருண்பாண்டியன் தயாரித்து நடித்த ’அன்பிற்கினியாள்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்த இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார்.


இந்த நிலையில்  கீர்த்தி பாண்டியன் ஒற்றை கம்பியில் சுழலும் வீடியோவை வெளியிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அவர் இரண்டு கையையும் விட்டுவிட்டு வெறும் கால்களின் பேலன்ஸில் மட்டும் சுற்றியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாவில் கூறிய போது ’துருவ இயக்கம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதற்கு நிறைய மன மற்றும் உடல் பயிற்சி தேவைப்படுகிறது. வலிமையை கட்டியெழுப்பவும், சீராக இருக்கவும் இந்த பயிற்சி உதவும். இந்த பயணம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.


 நான் கற்றுக் கொண்ட கலை வடிவங்களில் இதுவும் ஒன்று. எனக்கு இந்த கலையை மிகவும் பொறுமையாகவும் அற்புதமாகவும் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கு எனது நன்றி. இந்த கற்றல் அனுபவம் எனக்கு மிகவும் அபூர்வமாக இருந்தது’ என்று கூறியுள்ளார். கீர்த்தி பாண்டியனின் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement