• Jul 25 2025

தந்தை இறந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில்.. பைக் சுற்றுலாவைத் தொடங்கிய அஜித்... வெளியான புகைப்படங்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

அஜித்தின் 62ஆவது படத்திற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு அவரின் தந்தையின் மரணச் செய்தி பேரிடியாக வந்தது. இதனையடுத்து வருகிற மே மாதம் ஏகே 62 படத்தின் அப்டேட் வெளியாகி ஷூட்டிங்கும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அஜித் தரப்பில் இருந்து மற்றோர் ஷாக்கிங் அப்டேட் வந்துள்ளது.


அதாவது அஜித் தற்போது பைக்கில் உலக சுற்றுலாவை தொடங்கி விட்டாராம். அஜித் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர் தான் உலக சுற்றுலாவை தொடங்குவார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது திடீரென உலக சுற்றுலாவை தொடங்கிவிட்டதால், ஏகே 62 நிலைமை என்ன ஆச்சு என்பது தான் தல ரசிகர்களின் கேள்விக்குறியாக உள்ளது. 


அந்தவகையில் இதுவரை இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த அஜித், அடுத்ததாக நேபாளத்திற்கு சென்றுள்ளார். நேபாளத்தில் அவர் தற்போது பைக் ரைடிங் செய்து வருகிறார்.


நேபாளத்தில் அஜித் பைக் ரைடிங் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement