• Jul 25 2025

கிருஷ்ணர் வேடம் தரித்து நாடகத்தில் பங்கேற்ற நடிகை மஞ்சுவாரியார்- இணையத்தில் ட்ரெண்டாகும் போட்டோஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

ஜனவரி 11ஆம் தேதி அன்று வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று தான் துணிவு.அஜித்குமார் நடிப்பில் உருவாகி வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் தான் மஞ்சு வாரியார்.

அவர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.மேலும் இவர் துணிவு படத்தில் நடித்த கண்மணி என்னும் கதாபாத்திரத்தில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் இறங்கி பட்டையை கிளப்பினார்.


இந்தப்படத்தின் நடிகர் அஜித் செய்த பைக் பயணத்திலும், தவிர, துணிவு படத்தின் ‘காசேதான் கடவுளடா’ பாடலிலும் தனது பங்களிப்பை மஞ்சு வாரியர் கொடுத்திருந்தார். முன்னதாக கேரளாவில் உள்ள வனிதா சினி பிளக்ஸில் முதல் நாளில் ரசிகர்களுடன் படத்தை கண்டு ரசித்தார். 

அதன் பிறகு அவர் பேசுகையில், “முதல்முறையாக திரையரங்கில் முழு படத்தையும் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தேன். அதிரடி வேடத்தில் நடித்திருப்பது இதுவே முதல் முறை. இது போன்ற சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பயிற்சி அவசியம். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி.கேரளாவில் இந்த படத்திற்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. இந்தத் திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன்.” என்றார்.


இந்த நிலையில் நடிகை மஞ்சு வாரியர், கிருஷ்ணர் வேடம் தரித்து நாடகத்தில் பங்கேற்ற ஃபோட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.முன்னதாக தன் இன்ஸ்டாகிராமில் “சுமார் 3 வருடங்களுக்கு பிறகு மேடை நாடகத்தில் பங்கேற்கிறேன்.

குரு கீதாபத்மகுமார் அவர்களால் உருவாக்கப்பட்ட ராதே ஷ்யாம் மேடை நாடகம் இது. இதன் மூலம் சூரிய விழாவின் ஒரு பகுதியாவதில் பெருமிதம் அளிக்கிறது” என்று குறிப்பிட்டு இருந்தார்.இந்த நாடக நிகழ்வு திருவனந்தபுரம் ஏகேஜி சென்டரில் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement