• Jul 25 2025

என்னால தான் அசல் வெளியேற வேண்டியதா போச்சுனு நினைக்கிறாங்க- ரகசியத்தை உடைத்த நிவாஷினி

stella / 2 years ago

Advertisement

Listen News!


ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கிராண்ட் ஃபினாலே  நேற்றைய தினம் நடந்து முடிந்தது. இதில் அசீம் டைட்டில் வின்னராகத் தேர்வாகினார்.அத்தோடு பரிசாக 50 லட்சம் பணமும் ஒரு சொகுசுக்காரும் அசீமுக்கு வழங்கப்பட்டது.

அசீம் டைட்டில் வின்னர் ஆனாலும் சமூக வலைத்தளங்களில் அவரைத் திட்டித் தீர்த்தும் வருகின்றனர்.முன்னதாக பிக்பாஸ் வீட்டின் ஃபினாலேவின் முந்தைய எபிசோடில், ஆயிஷாவிடம் பேசிய நிவாஷினி மிகவும் வருத்தமாக பேசியுள்ளார்.


அதில், “என்னால தான் அசல் வெளியேற வேண்டியதா போச்சுனு அசிம் நினைக்கிறாரு போல.. வெளில வந்து பாருங்க உண்மை நிலவரம் தெரியும்ன்னு சொன்னேன்” என்று ஆயிஷாவிடம் வருந்திக் கூறினார்.


 இதனிடையே   ஃபினாலே எபிசோடில் பேசிய அசல், “சோசியல் மீடியாவை விட நேரில் பார்ப்பவர்களிடம் இருந்து நல்ல ரெஸ்பான்ஸ் வருது, நான் பண்ணிய பாடல்களை பலரும் இப்போது தெரிந்துகொண்டனர்” என கூற,  அதற்கு கமல், “பிக்பாஸ் போனாதான் திறமைகள் தெரியணும்னு இல்ல.. வள்ளுவரின் குறளையே பலரும் பஸ்ல தான் படிச்சாங்க.. நான்லாம் திருக்குறள் பஸ்ல தான் படிக்க ஆரம்பிச்சேன், பாடம் நடத்தும்போது இல்ல” என மோட்டிவேட் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement