• Jul 25 2025

நடிகை மீனாவுக்கு அந்த விஷயம் சுட்டு போட்டாலும் வராது..உண்மையை போட்டுடைத்த பிரபல இயக்குநர்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக தனது  திரை பயணத்தை தொடங்கினார். அதன் பின்னர் இவர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் வளர்ந்தார். தென்னிந்திய மொழிகளில் உள்ள அத்தனை டாப் நடிகர்களுடனும் இவர் ஜோடி போட்டு நடித்து விட்டார்.

இந்நிலையில் நடிகை மீனாவை பற்றி சமீபத்தில் பிரபல இயக்குநர் ஒருவர் பேசி இருக்கிறார்.தன்னுடைய எதார்த்தமான படங்களினால் ரசிகர்களின் மனதை கவர்ந்த கே எஸ் ரவிக்குமார் தான் அந்த இயக்குநர். நடிகை மீனா முதன் முதலில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நாட்டாமை திரைப்படத்தில் தான் நடித்தார். அந்த படத்தில் நடிப்பதற்கு முதலில் வேறொரு ஹீரோயினை பார்த்து அதன் பின்னர் தான் மீனா முடிவானார். 

மீனா தொடர்ந்து இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் முத்து, அவ்வை சண்முகி, வில்லன் போன்ற படங்களில் நடித்தார். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார், விஜயகுமார், சிம்ரன் நடித்த திரைப்படம் தான் நாட்டாமை. இந்த படத்தின் தெலுங்கு வர்ஷனை ரவிக்குமார் தான் இயக்கினார். அதில் சிம்ரன் கேரக்டரில் மீனா நடித்திருந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படத்தில் நடிகை மீனாவை நீலாம்பரி கேரக்டரில் நடிக்க வைக்க ரஜினி ஆசைப்பட்டார். அதன் பின்னர் தான் ரம்யா கிருஷ்ணன் அந்த கேரக்டரில் நடித்தார். இதைப்பற்றி பேசிய ரவிக்குமார் மீனாவுக்கு எப்படி நடித்தாலும் அந்த வில்லத்தனமான கேரக்டர் செட்டாகாது என்று சொல்லி இருக்கிறார்.

மீனாவின் கண்கள் மற்றும் நடிப்பு குழந்தைத்தனமாக இருக்கும். அதனால் படையப்பா படம் மட்டுமல்ல வேறு எந்த படத்திலும் அவருக்கு நெகட்டிவ் ரோல் செட்டாகாது. அப்படியே அவர் நெகட்டிவ் ரோலில் நடித்தாலும் ரசிகர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. மீனா படையப்பாவின் நீலாம்பரியாக நடிக்காமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறினார்.


Advertisement

Advertisement