• Jul 24 2025

அட.. இது பிரச்சனைக்குரிய கூட்டணி ஆச்சே...! தனுஷின் புதிய படத்தில் இணையும் வடிவேலு....!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் வாத்தி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் இப்படத்தில் சிவராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

பிரமாண்டமாக உருவாகும் இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்குநர் மாரி செல்வராஜுடன் கூட்டணி அமைக்க இருக்கிறார். அந்தப் படத்தில் வடிவேலுவை முக்கிய கேரக்டரில் நடிக்க வைக்க இயக்குநர் முடிவு செய்திருக்கிறார். ஆனால் தனுஷ் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். 

இதற்கு முக்கிய காரணம் படிக்காதவன் பட ஷூட்டிங்கில் நடந்த பிரச்சனைதான்.சில நாட்கள் அந்த படப்பிடிப்பில் பங்கேற்ற வடிவேலு கருத்து வேறுபாடு காரணமாக நடிக்க மறுத்தார். அதன் பிறகு தான் விவேக் அந்த கேரக்டரில் நடிக்க வந்தார். அந்த சம்பவத்திற்கு பிறகு தனுஷ், வடிவேலு கூட்டணி எந்த திரைப்படத்திலும் இணையவில்லை. ஆனால் இப்போது மாரி செல்வராஜ் இப்படத்தில் வைகை புயல் தான் நடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார்.

தனுஷ் மறுப்பு சொல்லியும் கூட கதை பற்றி எடுத்துச் சொல்லி வடிவேலு படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்று தெளிவுபடுத்தி இருக்கிறார். அதன் பிறகு தான் இந்தக் கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement