• Jul 25 2025

குடும்பத்துடன் இணைந்து தனது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடிய நடிகை நதியா- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நதியா. இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

நதியா தமிழ்ப் படங்களில் நடித்து ரசிகைகளின் மனதில் இடம் பெற்று தாக்கத்தை ஏற்படுத்தியவர்.தற்போது 57 வயதானாலும் நதியா இன்னும் இளமையாக இருந்து வருகின்றார்.


இவர் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லி விற்கும் அளவிற்கு பிரபலமாக இருந்தார் - நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை நதியா பெண்கள் சைக்கிள் ஆகியவையாகும்.

மேலும் தொடர்ந்தும் நதியா குணச்சித்திர வேடங்களிலும் அம்மா காரெக்டரிலும் நடித்து வருகின்றார்.57 வயதாகும் நடிகை நதியா அக்டோபர் 24ம் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவர் தனக்கு நெருங்கியவர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாட அந்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement