• Jul 26 2025

நடிகை நவ்யா நாயர் மருத்துவமனையில் திடீர் அனுமதி... காரணம் இதுவா..? கவலையில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை நவ்யா நாயர். மேலும் இவர் தமிழில் 2004 ஆம் ஆண்டு வெளியான அழகியே தீயே படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனை அடுத்து பாசக்கிளிகள், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி,  மாயக்கண்ணாடி, அமிர்தம், சில நேரங்களில், ஆடும் கூத்து, ராமன் தேடிய சீதை, ரசிக்கும் சீமானே உள்ளிட்ட பல படங்களில் மட்டுமே நடித்தார். 


இருப்பினும் பின்னர் 2010 ஆம் ஆண்டு சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கினார். ஆனாலும் பின்பு படங்களில் சிறிய வேடங்களில் மட்டுமே நவ்யா நாயர் நடித்திருந்த நிலையில் நவ்யா நாயர் தனது 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். இந்நிலையில் தற்போது ஒரு சோகமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.


அதாவது திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் நவ்யா நாயர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணம் உணவு ஒவ்வாமை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜானகி ஜானு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒவ்வொரு பகுதிகளிலும் ப்ரோமோஷனுக்காக அவர் மும்முரமாக சென்று கொண்டிருக்கிறார். 


அந்த வகையில் சுல்தான் பத்தேரி பகுதிக்கு நவ்யா நாயர் சென்றுக் கொண்டிருந்த நிலையில் இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் விரைவில் உடல் நலம் தேறி வர வேண்டும் என ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement