• Jul 25 2025

ஐப்பசியில் 'தாலி கயிற்றை மாற்றிய நடிகை நயன்தாரா- புதிய போட்டோவால் ஹப்பியான ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு நம்பவர் வஃன் நடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா.தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி ,மலையாளம் எனப் பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.


அத்தோடு தற்பொழுது அதிகமாக சோலோ கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகின்றார்.இப்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புக்களும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.


இவர் ஜூன் 9ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு தாய்லாந்து, ஸ்பெயின், துபாய் என ஹனிமூனை கொண்டாடி வந்தார் நயன்தாரா. இந்நிலையில் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி இரட்டை மகன்களுக்கு பெற்றோர் ஆகியிருப்பதாக அறிவித்தனர்.


திருமணம் ஆன 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற்றெடுத்த நயன்தாராவையும் விக்னேஷ் சிவனையும் விளாசி வந்தனர் நெட்டிசன்கள். சட்ட விதிகளை மீறி அவர்கள் செயல்பட்டதாக விமர்சனங்கள் எழுந்ததால் சுகாதாரத்துறை விசாரணை நடத்தியது. அதில் நயன்தாரா விக்கி மீது எந்த தவறும் இல்லை என்பது தெரியவந்தது.


இந்நிலையில் நயன்தாராவின் புதிய போட்டோவை பார்த்த ரசிகர்கள் செம ஹேப்பியாகியுள்ளனர். அதாவது இதுவரை மஞ்சள் கயிறுடன் இருந்து வந்த நடிகை நயன்தாரா தற்போது தாலி பிரித்து கோர்த்து செயினில் போட்டுள்ளார். ஹனிமூன, ஷூட்டிங் ஸ்பாட் என எங்கு சென்றாலும் மஞ்சள் கயிறுடனே இருந்தார்.

இந்நிலையில் நெற்றியில் குங்குமம் கழுத்தில் தாலி செயின் என புதிய கெட்டப்பில் உள்ளார் நயன்தாரா. புதிய படங்களில் ஒப்பந்தமாகும் நயன்தாரா தாலியை கழட்ட முடியாது என கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement