• Jul 26 2025

ரகசிய திருமணம், விவாகரத்து..அதன் பிறகு குழந்தை ... நடந்ததை கூறிய நடிகை நீனா

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இளம் வயதில் தனக்கு நடந்த முதல் திருமணம் மற்றும் விவாகரத்து குறித்து பிரபல பாலிவுட் நடிகையான நீனா குப்தா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

 இந்தி படங்களில் நடித்து வருபவர் நீனா குப்தா. பல இந்தி டிவி சீரியல்களில் நடித்து பட்டையை கிளப்பி உள்ளார். பெரிய திரையில் இருந்து ஒரு குட்டி பிரேக் எடுத்தவர் கடந்த 2018ம் ஆண்டு வெளியான பதாய் ஹோ படம் மூலம் என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவ்வாறுஇருக்கையில்  பேட்டி ஒன்றில் தன் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கெரியர் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார் நீனா குப்தா.


நீனா குப்தா தன் 20வது வயதில் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். கல்லூரியில் படிக்கும்போது திருமணம் எதற்கு என்று பெற்றோர் கேட்டதால், யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். 

அத்தோடு அது குறித்து நீனா குப்தா தற்போது  தெரிவித்திருப்பதாவது, நான் டெல்லியில் ஒரு மேடை நாடகத்தில் நடித்தேன். அப்பொழுது ஒரு கல்லூரியில் நாடகம் போட சென்றோம். என் கல்லூரியில் இருந்து அந்த கல்லூரிக்கு சென்றோம். அவர் ஐஐடியில் படித்து வந்தார். நாங்கள் சந்தித்தோம், காதலில் விழுந்தோம், பின்னர் திருமணம் செய்து கொண்டோம். அது ஒர்க்அவுட் ஆகவில்லை அதனால் ஓராண்டுக்குள் பிரிந்துவிட்டோம் என்றார்.


நீனா குப்தா மேலும் தெரிவித்ததாவது... ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே அன்பு என்று எதுவும் இல்லை. எல்லாமே காமத்துடன் தான் துவங்குகிறது. உங்களுக்கு ஒருவரை பிடித்துவிட்டு, தொடர்ந்து பாசம் வைத்தால் அது வழக்கமாகிவிடும். என் மகள் மசாபா மீது தான் எனக்கு உண்மையான அன்பு ஏற்பட்டது. மற்றவர்கள் வேண்டுமானால் அன்பை உணர்ந்திருக்கலாம் ஆனால் எனக்கு அப்படி இல்லை என்றார்.


அனைத்துமே காமத்தில் தான் துவங்குகிறது.அத்தோடு  அது எப்படி வேண்டுமானாலும் மாறலாம். நீங்கள் திருமணம் செய்தாலும், செய்யாவிட்டாலும், வேறு ஒருவரிடம் சென்றாலும் சரி. ஒரு குழந்தையிடம் தான் அன்பை உணர்ந்தேன். அவளுக்காக நான் எதையும் செய்வேன் என நீனா குப்தா மேலும் தெரிவித்தார்.


முதல் கணவரை பிரிந்த பிறகு கெரியரில் கவனம் செலுத்தி வந்தார் நீனா குப்தா. அப்பொழுது அவருக்கும், மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரரான விவியன் ரிச்சர்ட்ஸுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. அதில் நீனா கர்ப்பமானார். விவியன் ஏற்கனவே திருமணமானவர் என்பதால் குழந்தையை தான் தனியாக வளர்ப்பது என்று முடிவு செய்தார் நீனா. அந்த குழந்தை தான் மசாபா குப்தா.


Advertisement

Advertisement