• Jul 26 2025

10 வருடங்களுக்குப் பிறகு தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரியாமணி! அதுவும் என்ன படம் தெரியுமா?

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

பிரியாமணி என்கின்ற பிரியா வாசுதேவ் மணி ஐயர் தேசிய விருது பெற்ற இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் வடிவழகியும் ஆவார்.


இவர் 2006 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படம் பருத்திவீரனில் முத்தழகு என்னும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக 'சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது' கொடுக்கப்பட்டது.


இந்நிலையில் ஹரி ஹரா பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் கன்னடா மற்றும் தமிழ் மொழிகளில் நேரடியாகவும் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் டப்பிங் செய்தும் பான் இந்தியா படமாக உருவாகியிருக்கும் படம் "DR 56". இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி தயாரித்ததுடன் நாயகனாகவும் நடித்திருக்கிறார் பிரவீன் ரெட்டி. 


பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராஜேஷ் ஆனந்த் லீலா இயக்கியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு சென்னையில் இன்று நடந்தது.


இதில் கலந்துகொண்டு பேசிய படத்தின் நாயகி ப்ரியாமணி, “‘சாருலதா’ படத்திற்கு பிறகு தமிழில் நான் நடித்து வெளிவரும் படம் ‘DR 56’ என்பதால் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.


அதுமட்டுமல்லாமல் "பத்து வருடங்களுக்குப் பிறகு தமிழ்ப் படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இனி தொடர்ந்து தமிழில் நடிப்பேன்” என நடிகை ப்ரியாமணி தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement