• Jul 25 2025

நடிகை பூஜா ஹெக்டே வீட்டில் நடந்த திருமண நிகழ்வு- ஆனந்த கண்ணீருடன் அவரே பகிர்ந்த வைரல் போட்டோஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான  'முகமூடி'என்னும் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமானவர் தான் பூஜா ஹெக்டே.இதனைத் தொடர்ந்து  தெலுங்கு, தமிழ், ஹிந்தி படங்களில் நடித்து பான் இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.


துளு நாட்டின் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த இவர் தெலுங்கில் ஒக லைலா கோஷம் படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதோடு 22 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களையும் இன்ஸ்டாகிராமில் பெற்றுள்ளார்.


சமீபத்தில் நடிகை பூஜா ஹெக்டே,  வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். 3 கண்டங்களில் 4 நகரங்களில் சுற்றுலாவை முடித்து விட்டு மீண்டும் சல்மான் கான் நடிக்கும் "கிஷி கா பாய் கிஷி கி ஜான்"  படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.


தற்போது "ஜனகனமன", சர்க்கஸ் மற்றும் சல்மான் கானுடன் "கிஷி கா பாய் கிஷி கி ஜான்", தெலுங்கில் மகேஷ் பாபு - த்ரி விக்ரம் இணையும் புதிய படம் என பல படங்களை பூஜா ஹெக்டே கைவசம் வைத்துள்ளார்.இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே, தனது அண்ணன் திருமண நிகழ்வு குறித்து பதிவிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 


அந்த பதிவில், "என் அண்ணன் தன் உயிரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்! இந்த நிகழ்வு ஒரு வார ரோலர்கோஸ்டர் ரைடு! ஆனந்தக் கண்ணீருடன் அழுதிருக்கிறேன், குழந்தையைப் போல சிரித்திருக்கிறேன்.அண்ணா, உங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் அடியெடுத்து வைக்கும் போது, ​​நீங்கள் அளவுகடந்து நேசிப்பீர்கள், உங்களை முழு மனதுடன் ஒப்படையுங்கள் & ஒருவருக்கொருவர் இடையே அமைதி மற்றும் புரிதலைக் காண்பீர்கள் என்று நம்புகிறேன். ஷிவானி, அழகான அற்புதமான மணமகளை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்கிறோம்". என பூஜா ஹெக்டே பதிவிட்டுள்ளார்.





Advertisement

Advertisement