• Jul 24 2025

செந்திலை காப்பாற்றிய அமுதா.. கடும் கோபத்தில் அன்னலட்சுமி -உண்மையை மறைத்த மாணிக்கம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


ஷு தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.

அமுதா செந்திலை காப்பாற்ற முயல செல்வாவும் செல்வாவின் ஆட்களும் உள்ளே வந்து பழனியின் ஆள்களை அடித்து விரட்டுகின்றனர்.அடுத்து செல்வாவின் ஆள் ஒருவன் மேலே ஏறி கயிற்றை அவிழ்த்து விட செல்வா போன் செய்து தனது ஆட்களிடம் தப்பித்து ஓடுபவர்களை பிடிக்குமாறு சொல்கிறான். அடுத்து போலீஸ் ஸ்டேஷனலிருந்து செல்வாவிற்கு போன் வருகிறது.பிறகு செந்திலை கடத்தியவர்கள் சரணடைந்து விட்டதாக சொல்ல செல்வா, அமுதா, மாணிக்கம் வந்து பார்க்க, வாத்தியார் சரண் அடைந்து இருக்கிறார்.செந்திலுக்கும் தனக்கும் ஏற்கனவே பகை இருந்ததால் அதை தீர்த்து கொள்ள தான்  அப்படி செய்ததாக சொல்கிறான்.


பிறகு அமுதா, மாணிக்கம், செந்தில் வெளியே வர செந்தில் தள்ளாடியபடியே வருகிறான். மாணிக்கம் அமுதாவிடம் அக்காவுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம், தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவா என சொல்கிறார். மாணிக்கம் அவனை தெளிய வைக்கலாம் என சொல்லி டீ கொடுக்க செந்தில் குடிக்க மறுக்கிறான்.


இதனால் அமுதா அவனிடம் என்ன சித்தப்பா உங்க மருமகனுக்கு டீ குடிச்சா போதை இறங்கிருமா அதான் வேண்டாம்னு சொல்றாகளா என கோபத்துடன் சொல்ல, செந்தில் டீயை வாங்கி குடிக்கிறான். மேலும் செந்தில் அமுதாவிடம் உனக்கு என்னை பிடிக்கலன்னா எதுக்கு என்னை காப்பாத்துன என கேட்க, அமுதா மாணிக்கத்திடம் சித்தப்பா கொஞ்ச நேரம் சும்மா இருக்க சொல்லுங்க, என் கிட்ட அடி வாங்கிரப் போறாக என சொல்கிறாள்.அடுத்து செந்தில், அமுதா, மாணிக்கம் என மூவரும் வீட்டிற்கு வர அன்னலட்சுமி திட்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை  ஷு தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Advertisement

Advertisement