• Jul 26 2025

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே விக்ரமிற்கு சிறப்புப் பரிசு வழங்கிய நடிகை பூர்ணா- குவியும் வாழ்த்துக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் ஐக்கிய அமீரகம்  கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகின்றனர். அதன்படி, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலாபால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.


 சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மீனா, வெங்கட் பிரபு, சரத்குமார், கமல்ஹாசன், பாவனா ஆகியோர் இந்த விசாவை பெற்றிருந்தனர். இந்த நிலையில் நடிகர விக்ரமுக்கும் இந்த கோல்டன் விசா கிடைத்துள்ளது.

 இதனை நடிகை பூர்ணா மற்றும் அவரது கணவர் ஷானித் ஆசிப் அலி வழங்கியுள்ளனர். இந்த புகைப்படத்தை பூர்ணா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.மேலும் இவ் விசாவைப் பெறுவதற்காக விக்ரம் வந்த லுக்கும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement