• Jul 26 2025

தளபதி 67 படத்தில் லோகேஷ் பயன்படுத்தவுள்ள 90 ஸ் பாடல் என்ன தெரியுமா?- சூப்பர் அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இதுவரை சூப்பர் ஹிட் படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார். இவருடைய இந்த முதல் படமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தையும் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தையும் இயக்கியிருந்தார்.இவை இரண்டுமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்று முன்னணி இயக்குநராக உயர்ந்தார்.மாஸ்டர் படத்தின் மூலம் தன்னால் கமர்ஷியல் படமும் எடுக்கமுடியும் என நிரூபித்தார். 


தொடர்ந்து கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கி ஹாட்ரிக் வெற்றியை பெற்றார். இதனால் இந்திய அளவில் பிரபலமான இயக்குநராக மாறினார்.எனவே தான் இயக்கிய நான்கு படங்களும் வெற்றி என்பதால் தற்போது லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தன் ஒவ்வொரு படங்களிலும் 90 களில் வெளியான பாடல்களை பயன்படுத்துவார். கடைசியாக விக்ரம் படத்தில் சக்கு சக்கு வத்திக்குச்சி என்ற பழைய பாடலை பயன்படுத்தினார். இதைத்தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தில் சத்யராஜ் நடிப்பில் வெளியான வில்லாதி வில்லன் படத்தில் இடம்பெற்ற தீம்தலக்கடி என்ற பாடலை பயன்படுத்த இருக்கிறாராம். தற்போது இந்த தகவல் இணையத்தில் செம வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement