• Jul 26 2025

பிரமாண்டமாக பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ரோஜா..ஆதரவாளர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

ரோஜா செல்வமணி ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் ஆந்திராவில் சட்டமன்ற உறுப்பினராகவும் மற்றும் தற்பொழுது சுற்றுலாத்துறை அமைச்சராகவும் உள்ளார்.


மேலும் இவர் 90களில் மிகவும் பிரபலமாக திரையுலகில் வலம் வந்தவர். மேலும் இவர்  ரஜினிகாந்த், விஜயகாந்த், கார்த்திக், பிரபு என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.


அதுமட்டுமல்லாமல் இவர் தன்னை தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகம் செய்த, இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.


படங்களில் நடிப்பதை முழுமையாக நிறுத்திருக்கும் நடிகை ரோஜா, தனது கவனத்தை அரசியலில் செலுத்தி வருகிறார். 


இந்நிலையில் நடிகையும், ஆந்திர அமைச்சருமான ரோஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நேத்து பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. அப்போது கிரேனில் தூக்கி வந்து பிரமாண்ட ரோஜா மாலையை அணிவித்த ஆதரவாளர்கள்.


Advertisement

Advertisement