• Jul 25 2025

கலகத் தலைவர் திரைப்படத்தை பார்த்த தமிழக முதல்வர் என்ன சொன்னார் தெரியுமா?- அசந்து போன படக்குழு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தடம், தடையற தாக்க,போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபல்யமான நடிகராக அறியப்பட்டவர் தான் இயக்குநர்  மகிழ் திருமேனி. இவர் தற்பொழுது  நடிகர் உதயநிதியை வைத்து இயக்கிய திரைப்படம் தான் ‘கலகத் தலைவன்’.இப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.


பிக்பாஸ் பிரபலம் ஆரவ் இப்படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார். அதுமட்டுமின்றி மெட்ராஸ் பட நடிகர் கலையரசனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்து உள்ளார்.


ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள கலகத் தலைவன் திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீசாகி உள்ளது. இதனிடையே இப்படத்தின் சிறப்பு காட்சியை தமிழக முதல்வரும், உதயநிதியின் தந்தையுமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் கண்டுகளித்தார். அப்போது அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் இருந்தார்.


படம் பார்த்த பின் இயக்குநர் மகிழ் திருமேனி, உதயநிதி ஆகியோரை பாராட்டிய ஸ்டாலின், படம் அருமையாக இருப்பதாகவும், சமூக அக்கறையோடு நேர்த்தியான படைப்பை கொடுத்திருப்பதாகவும் படம் வெற்றிபெற படக்குழுவினருக்கு அவர் வாழ்த்துக்களையும் தெரிவித்து உள்ளார். முதல்வரின் இந்த விமர்சனத்தால் படக்குழு மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.



Advertisement

Advertisement