• Jul 24 2025

SK21 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை சாய் பல்லவி - வைரல் வரும் கியூட் புகைப்படங்கள் இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை சாய் பல்லவி கடந்த 2015ம் ஆண்டில் வெளியான மலையாள படமான பிரேமம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, இவர் சினிமாவில் நடிக்க வந்தவர். தன்னுடைய முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார் சாய் பல்லவி.

 தற்போதும் பிசியாக படங்களில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. தமிழில் சிவகார்த்திகேயனுடன் எஸ்கே21 படத்தின் சூட்டிங்கிற்காக தற்போது காஷ்மீரில் உள்ளார் சாய் பல்லவி. இந்நிலையில் சாய் பல்லவியின் ரீசண்ட் கிளிக்ஸ் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படங்களில் தலையில் முக்காடு போட்டபடியும், ஸ்வெட்டர் உள்ளிட்டவற்றை அணிந்தபடியும் சாய் பல்லவி காணப்படுகிறார். அவர் தற்போது அமர்நாத் யாத்திரையை மேற்கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளார்.

தன்னுடைய பயணத்தின்போது அவர் எடுத்த புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயனுடன் சாய் பல்லவி கமிட்டாகியுள்ள எஸ்கே21 படத்திற்காக தற்போது அவ் காஷ்மீரில் முகாமிட்டுள்ளார்.

முன்னதாக படத்தின் பூஜையின்போது சாய் பல்லவி கலந்துக் கொண்ட வீடியோவும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சாய் பல்லவியின் சிரிப்பு, அழகான முடி போன்றவை ரசிக்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தனுஷுடன் மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடலுக்காக இவர் ஆடிய நடனமும் சர்வதேச அளவில் ட்ரெண்டானது.




Advertisement

Advertisement