• Jul 23 2025

அந்த இயக்குநருடன் காதலால் என் கெரியரே போச்சு.. மனம் திறந்த விஜய் பட நடிகை...!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் அமீஷா படேல். அவர் விஜய்க்கு ஜோடியாக புதிய கஜத்தை படத்தில் நடித்தவர். தற்போது அமீஷா படேல் சன்னி தியோல் ஜோடியாக Gadar 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அமீஷா படேல் அளித்து இருக்கும் ஒரு பேட்டியில் தான் ஒரு இயக்குநரை காதலித்ததால் மொத்த கெரியரும் போச்சு என புலம்பி இருக்கிறார்.

இந்த துறையில் நேர்மையாக இருந்தால் யாருக்கும் பிடிக்காது. அதுவே என் வாழ்க்கையில் பெரிய பிரச்சனையாகவும் வந்தது. நான் இயக்குநர் விக்ரம் பட் உடன் காதலில் இருந்தது பற்றி வெளிப்படையாக பேசினேன். 

அதுவே என் கெரியருக்கு பிரச்சனையானது. 12 - 13 வருடங்களாக நான் ஆண்களே வேண்டாம் என நினைத்து வேறு யாரையும் காதலிக்கவில்லை.

நடிகை சிங்கிளாக இருந்தால் தான் ஆடியன்ஸும் ரசிக்கிறார்கள். பெண்களுக்கு மட்டும் இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என அமீஷா பட்டேல் தெரிவித்து இருக்கிறார். 

Advertisement

Advertisement